உணவில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் குறிப்புகள் !

1. உணவுக்கட்டுப்பாடு:

  • எப்போதும் உணவு உட்கொள்வதில் ஒரு சுய கட்டுப்பாடு வேண்டும். 
  • சாப்பிடும் போது எப்போதும் சிறிய தட்டைப் பயன்படுத்துங்கள். 
  • எதைச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.


2. உணவு திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்:

  • காலை உணவை அதிகமாக உட்கொள்வது வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது.
  • உங்கள் காலை உணவை நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், மதிய உணவுவினை புரதங்கள் நிறைந்ததாகவும் திட்டமிடவும்.
  • ஒரே நாளில் ரொட்டி, உருளைக்கிழங்கு, சாஸ்(sauces), வெள்ளை அரிசி போன்ற  கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
  • உங்கள் சமையலறை மற்றும் குளிர்சாதன பெட்டியை ஆரோக்கியமான தின்பண்டங்கள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்ததாக வைத்திருங்கள்.

3. ஏராளமான தண்ணீரை உட்கொள்ளுங்கள்:

  • ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்தது 3 எல் தண்ணீரை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • சோடா, பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் போன்ற சர்க்கரை பானங்களை நீக்கி, அவற்றிற்கு மாற்றாக தண்ணீரை பருகுங்கள்.
  • செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய வெறும் வயிற்றில் 1 lt தண்ணீர் குடிப்பதன் மூலம் ஒரு நாளைத் தொடங்குங்கள். இது நீரேற்றமாக (stay hydrated) இருக்க உதவுகிறது மற்றும் இரத்தத்திலிருந்து நச்சுகளை சுத்தப்படுத்துகிறது.

4. உணவைத் தேர்ந்தெடுங்கள்: ஆரோக்கியமான உணவைத் தேர்வுசெய்யவும், இனிப்பு வகைகளில் கொட்டைகள்(Nuts), பழங்கள், சுவையான தயிர் (flavoured yoghurts) ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்கும்.

5. உடற்பயிற்சி செய்யாவிட்டால் நடனம் செய்யுங்கள் !



Comments