Posts

Showing posts from June, 2020

உணவில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் குறிப்புகள் !

Image
1. உணவுக்கட்டுப்பாடு: எப்போதும் உணவு உட்கொள்வதில் ஒரு சுய கட்டுப்பாடு வேண்டும்.  சாப்பிடும் போது எப்போதும் சிறிய தட்டைப் பயன்படுத்துங்கள்.  எதைச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். 2. உணவு திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்: காலை உணவை அதிகமாக உட்கொள்வது வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் காலை உணவை நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், மதிய உணவுவினை புரதங்கள் நிறைந்ததாகவும் திட்டமிடவும். ஒரே நாளில் ரொட்டி, உருளைக்கிழங்கு, சாஸ்( sauces ), வெள்ளை அரிசி போன்ற  கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் சமையலறை மற்றும் குளிர்சாதன பெட்டியை ஆரோக்கியமான தின்பண்டங்கள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்ததாக வைத்திருங்கள். 3. ஏராளமான தண்ணீரை உட்கொள்ளுங்கள்: ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்தது 3 எல் தண்ணீரை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சோடா, பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் போன்ற சர்க்கரை பானங்களை நீக்கி, அவற்றிற்கு மாற்றாக தண்ணீரை பருகுங்கள். ச

நெல்லிக்காயின் நன்மைகள் !

Image
1. வைட்டமின்-C: ஆரஞ்சு, போன்ற சிட்ரஸ் பழங்களைக்காட்டிலும் இரண்டு மடங்கு வைட்டமின்-C அரை நெல்லிக்காயில் உள்ளது. எனவே இதை வெறுமனே சாப்பிட்டாலும் சரி அல்லது நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து சுவைக்கு தேனும் சேர்த்துக் கொண்டால் சளி, தொண்டைக் கட்டுதல் போன்ற பிரச்னைகள் வராது. 2. நோய் எதிர்ப்புச் சக்தி : உடலில் நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலை பெரிய நெல்லிக்காய் அளிக்கிறது. வேகமாகப் பரவும் கிருமிகள், நோய்த் தொற்றுகளையும் எதிர்கொள்ளும் ஆற்றலையும் அளிக்கிறது. எனவே முழு நெல்லிக்காயை ஜூஸ் போட்டுக் குடிக்கலாம் அல்லது உலர்ந்த அரை நெல்லிக்காயை அவ்வப்போது சாப்பிடலாம். 3. ஜீரண சக்தி : உணவு செரிமாணப் பாதையை சீராக்கி ஜீரண சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் ஜீரண கோளாறு தொடர்பான மலச்சிக்கல், வயிறு எரிச்சல், வாந்தி , குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் எளிய சிறந்த தீர்வு அரை நெல்லிக்காய். ஒருவேளை ஜீரணக் கோளாறு ஏற்பட்டால் உடனே வெதுவெதுப்பான நீரில் அரை நெல்லிக்காய் பொடியைக் கலந்து ஒரு கிளாஸ் குடியுங்கள். உடனே பலனை உணர்வீர்கள். இது பசியைத் தூண்டுவதிலும்

பூண்டை உபயோகப்படுத்தும் முறை !

Image
1. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. 2. நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள், சைனா பூண்டை விட நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது. 3. பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது. 4. பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். 5. பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பில்லை.அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல அதிகமாக சேர்த்துக் கொள்ளாதீர்கள். 6. தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். 7. பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும். 8. பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும். 9. காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக