பூண்டை உபயோகப்படுத்தும் முறை !

1. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

2. நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள், சைனா பூண்டை விட நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது.
3. பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது.
4. பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.
5. பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும் பாதிப்பில்லை.அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல அதிகமாக சேர்த்துக் கொள்ளாதீர்கள்.
6. தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.
7. பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு கலந்து காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட நெஞ்சுக் குத்து நீங்கும்.
8. பூண்டையும், துத்தி இலையையும் சேர்த்து லேசாக நசுக்கி நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி எண்ணெயை உடலில் தடவி வர உடல் வலி குறையும்.
9. காய்ச்சிய பாலில் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டைப் போட்டுப் பருக நன்கு தூக்கம் வரும். இரத்தக் கொதிப்பு அடங்கும்.
10.பூண்டைப் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சேர்த்துச் சாப்பிட மூலநோய் நீங்கும்.
11. பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும்.

Click Ads and Earn Dollars
HomeBasedJobs

Comments