இரத்த அழுத்த பிரச்சினைகளில் தவிர்க்க வேண்டிய உணவுகள். !




1.சர்க்கரை: 

சர்க்கரை உப்புக்கு நேர்மாறானது என்றாலும், உடல் பருமன், எடை அதிகரிப்பு மற்றும் உடலில் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைச் சேர்ப்பதால் சர்க்கரை உங்கள் இரத்த அழுத்த அபாயத்தையும் அதிகரிக்கும். American Heart Association கூற்றுப்படி, ஆரோக்கியமான இதயத்திற்கு ஆண்களும் பெண்களும் முறையே 9 மற்றும் 6 டீஸ்பூன் சர்க்கரை அளவை குறைக்க வேண்டும்.



2.மது:
மது அருந்துதல் கல்லீரலை நேரடியாக பாதிக்கும் என்று அறியப்படுகிறது, ஆனால் உங்கள் இரத்த அழுத்தத்தையும் அதிகரிப்பதில் இது ஒரு பங்கைக் கொண்டிருக்கிறது  என்பது மிகச் சிலருக்குத் தெரியும்.
ரெட் ஒயின் போன்ற சில பானங்கள், மிதமாக உட்கொள்ளப்படுவது, சிறந்த இதய ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து உட்கொள்ள வேண்டும்.

3. பதப்படுத்தப்பட்ட உணவு:
பதப்படுத்தப்பட்ட உணவு, இறைச்சி உட்பட, போன்றவற்றில் நிறைய சோடியம் உள்ளது, இது இரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கும். நீங்கள் இரத்த அழுத்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள் என்றால், சோடியம்  மிகுதியாக இருக்கும் பதப்படுத்தப்பட்ட மற்றும் JUNK FOODs போன்றவற்றை குறைதுக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
4. உப்பு:
உயர் இரத்த அழுத்தம் பிரச்சினைகள் இருக்கும்போது உப்பு நுகர்வு தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் அறிந்ததே. 




HomeBasedJobs

Comments